விப்ரோ நிகர லாபம் ரூ.2,272 கோடி
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் நான்காம் காலாண்டு
நிகர லாபம் 2 சதவீதம் உயர்ந்து 2,272 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனத்தின் வருமானம் 4 சதவீதம் உயர்ந்து 12,171 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனத்தின் லாப வரம்பு 22 சதவீதமாக இருக்கிறது.
எதிர்பார்ப்பு
மார்ச் காலாண்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. அதே போல வரும் ஜூன்
காலாண்டு எதிர்பார்ப்பிலும் பெரிய வளர்ச் சியை நிறுவனம் எதிர்பார்க்
கவில்லை. 176 கோடி டாலர் முதல் 179 கோடி டாலர் வரை வருமானம் இருக்கும் என
நிறுவனம் கணித் திருக்கிறது. இது மார்ச் காலாண் டுடன் ஒப்பிடும் போது 0.5
முதல் 1 சதவீதம் வரை குறைவாகும்.
இயக்குநர் குழுவில் ரிஷாத் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜியின் மூத்த மகன் ரிஷாத் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். நீண்ட நாட்களாக
எதிர்பார்த்த இந்த நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் நேற்று அறி வித்தது.
வரும் மே 1-ம் தேதி முதல் விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவர்
இணைவார். இவர் ஏற்கெனவே விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குநர்
குழுவில் இருக்கிறார். மேலும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் இயக்குநர்
குழுவிலும் இருக்கிறார்.
இவர் 2007-ம் ஆண்டு நிறுவனத் தில் இணைந்தார். வங்கி மற்றும் நிதிச்சேவை
பிரிவில் இருக்கும் சில சிறப்புத் திட்டங்களுக்குத் தலைவரான இவர், தலைமை
உத்தி அலுவலராகவும் (சிஎஸ்ஓ) இருந்தார்.
ரிஷாத் பிரேம்ஜி விப்ரோ நிறுவ னத்தின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார் என்று
அஸிம் பிரேம்ஜி பலமுறை சொல்லி இருந்தாலும் தற்போது இயக்குநர் குழுவில்
நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது என்று துறை வல்லுநர்கள்
தெரிவித்திருக் கிறார்கள்.
விப்ரோ நிறுவனத்தில் அஸிம் பிரேம்ஜி வசம் நேரடியாக 3.78 சதவீத பங்குகளும், ரிஷாத் பிரேம்ஜி வசம் 0.03 சதவீத பங்குகளும் இருக்கிறது.
10 கோடி டாலர் தொகையை ஆரம்பமாகக் கொண்டு 2014-ம் ஆண்டு இவரது தலைமையில்
விப்ரோ வென்ச்சர்ஸ் ஆரம்பிக்கப் பட்டது. இந்த தொகையை வளர்ந்து வரும்
தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
விப்ரோ நிறுவனத்தில் இணை யும் முன்பு பெயின் அண்ட் கம்பெனி, ஜிஇ கேபிடல்
ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந் திருக் கிறார். ஹார்வேர்ட் பல்கலைக்
கழகத்தில் எம்பிஏ படித்தவர் ரிஷாத் பிரேம்ஜி.
No comments:
Post a Comment