ஏமன் விவகாரத்தில் இரானை எச்சரித்துவிட்டோம்: ஒபாமா
ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுத்திகளுக்கு உதவி செய்வதை நிறுத்திக்கொள்ள
இரானுக்கு எற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா
தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக
பேசும்போது, "இரானுக்கு நேரடியான எச்சரிக்கை இந்த விவகாரத்தில்
விடுக்கப்பட்டது.
தற்போது அவர்களது கப்பல்கள் சர்வதேசக் கடலில் நிற்கின்றன. கடல்
போக்குவரத்துக்கான சுதந்திரத்தை மீறாமல் இருக்கவே நாங்கள் பொறுமை காத்து
வருகிறோம்.
ஏமனுக்கு ஆயுதங்களை அனுப்பினால், அவர்களது கடல் போக்குவரத்துக்கு
அச்சுறுத்தல் ஏற்படும். மறைமுகமாகவோ தெள்வற்ற முறையிலோ நாங்கள் இதனை
அவர்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்த எச்சரிக்கையை மிக நேரடியான முறையில்
விடுத்துவிட்டோம்" என்றார்.
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் இரானுக்கு எதிராக விமானம்
தாங்கிய அமெரிக்க ராட்சத போர் கப்பல் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், இது
தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க பாதுகாப்புத் துறை
வெளியிட்டுள்ளது.
இரான் சரக்குக் கப்பலகள் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருப்பதே, இந்த
விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை இருக்கச் செய்துள்ளதாக பெண்டகன்
நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சர்வதேசக் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் இரான் கப்பல்கள் மீது
தாக்குதல் நடத்தி சரக்குகளைப் பறிமுதல் செய்யும் திட்டம் உள்ளதா? என்று
அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி கர்னல் ஸ்டீவ் வாரனிடம் கேட்டபோது, இது
தொடர்பாக பதில் அளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.
No comments:
Post a Comment