பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பரில் மேற்கு மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே, சாலையோரம் உறங்கியவர்கள் மீது நடிகர் சல்மான்கான் காரை மோதி, விபத்து ஏற்படுத்தியதில், ஒருவர் பலியானார்.
இதுதொடர்பான வழக்கை மும்பை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று சல்மான் கானின் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment