உலகளாவிய அளவில் மின்னணு பொருட்களின் கழிவுகள் அதிகம் குவியும் நாடுகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
செல்போன், கம்ப்யூட்டர், டி.வி., பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் என குப்பையில் வீசப்படும் மின்னணு பொருட்களின் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை சார்பில் 2014-ம் ஆண்டில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கை நியூயார்க்கில் அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 4 கோடியே 18 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதில் 65 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.
அதிக அளவில் மின்னணு பொருட்கள் கழிவுகள் சேகரமாகும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 71 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அடுத்த இடத்தில் சீனா (60 லட்சம் டன்) உள்ளது. ஜப்பான், ஜெர்மனி ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 17 லட்சம் டன் மின்னணு பொருட்கள் குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment