Tuesday, 21 April 2015

வாயில் பிளாஸ்திரியை ஒட்டிய போலார்டுக்கு ஹர்பஜன் ஆதரவு

வாயில் பிளாஸ்திரியை ஒட்டி விளையாடிய போலார்ட்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பெங்களூர் பேட் செய்தபோது 3-வது ஓவரில் கெயிலுக்கு அருகே பீல்டிங் செய்த போலார்ட், கெயிலை கிண்டல் செய்து வம்புக்கு இழுத்தார். அதைப் பார்த்த நடுவர், போலார்டை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தார்.
இதையடுத்து டக் அவுட்டுக்கு (பவுண்டரி எல்லையில் வீரர்கள் அமருமிடம்) சென்ற போலார்ட், அங்கிருந்த பிளாஸ்திரி ஒன்றை தனது வாயில் ஒட்டிக்கொண்டு பீல்டிங் செய்ய வந்தார். அதைப் பார்த்து சகவீரர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த ரசிகர்களும் சிரித்தனர்.
போலார்டின் இந்த காமெடி, போட்டியின்போது நகைச் சுவையாக பார்க்கப்பட்டாலும், அவருடைய செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் ஹர்பஜன் சிங்கோ, போலார்டுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: போலார்ட் தனித்தன்மை மிக்கவர். நடுவர் அமைதியாக இருக்கும்படி கூறிய தால், போலார்ட் அமைதியாக இருக்க விரும்பினார்.
அதன் படி அவர் தனது வாயில் பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டு அமைதியாக இருந்தார். அவர் சற்று வித்தியாசமானவர். எல்லா விஷயங்களையும் வித்தியாச மாகவே செய்ய விரும்புவார். அதுபோன்றுதான் இப்போது பிளாஸ்திரியை வாயில் ஒட்டினார். அதனால் அதில் தவறும் ஒன்றும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed