Tuesday, 21 April 2015

ஊழல் வழக்கு: மகிந்த ராஜபக்ச விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ராஜபக்ச | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்


ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த வாரத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து தேர்தலில் இருந்து பின்வாங்கச் செய்ததாக ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார். இதுநாள் வரை ராஜபக்சவுக்கு நெருக்கமான வர்கள் மீது விசாரணை மேற் கொள்ளப்பட்டு வந்தது. இப்போது தான் முதன்முறையாக ராஜபக்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், ராஜபக்ச வரும் வியாழக்கிழமை ஊழல் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வரும் புதன்கிழமை வேறு சில ஊழல் வழக்குகள் தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான சமல் ராஜபக்ச விடம், மகிந்தவின் ஆதரவாளர்கள் இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வங்கிக் கணக்கு இல்லை
வெளிநாடுகளில் ராஜபக்சவுக்கு வங்கிக் கணக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனக்கும் எனது குடும்பத்தின ருக்கும் வெளிநாட்டு வங்கிகளில் வங்கிக் கணக்குகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கள். தற்போதைய ஆட்சியாளர்க ளால் எனக்கு எதிராக அவதூறு புகார் கள் கூறப்படுகின்றன என்றார் ராஜபக்ச.

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed