Thursday, 23 April 2015

காதலி கவிதைகள்


வேகமாய் என்னை

கடந்து சென்று

ஓரமாய் பார்த்த

அவள் பார்வையின்

அர்த்தம் புரிந்ததெனக்கு...

நாளை காதலர் தினம்

ரோஜாப்பூ பறித்து வா

என்கிற அவள்

விழிகளுக்கு தெரியாது...

நான் அவளை

காதலிக்க ஆரம்பித்த

நாளிலிருந்தே

பூக்களையும் காதலிக்கத்

ஆரம்பித்து

விட்டேனென்று...

உன்னை பார்த்து

துள்ளி வந்த

அலைகள் கூட

பௌர்ணமி

நிலவென்று

கிள்ளி செல்கின்றன

உன் கால்களை

மெல்ல....

ஓராயிரம் பார்வைகள்

என் அருகமர்ந்து

பார்த்தாய்!

ஆனாலும் என்னிடம்

விடைபெற்று

தூரச்சென்று

திரும்பிப் பார்த்தாயே..

அந்த

ஒற்றைப் பார்வையில்

உள்ளதடி

என் ஆயுளின் அர்த்தம்!

No comments:

Post a Comment

E-Duke bike launch confirmed